About Kumari Kalari Kalai Kalanjiyam
Join our martial art club and be healthy.

குமரி களரி கலைக் களஞ்சியம்:-
இந்த நிறுவனம் 1990ஆம் ஆண்டு 9 மாணவர்களுடன் தொடங்கப்பட்டு, சிலம்பம் மற்றும் களரி பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர் 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இங்கு வாள் சண்டை, கத்தி சண்டை,குஸ்தி , மல்யுத்தம், பிடிமுறை, தட்டுமுறை, அடிமுறை, மெய்யடக்கம்,எடுத்து எறிதல்,பூட்டு பிரிவு,சிலம்பம், மான்கொம்பு, அலங்கார சிலம்பம் போன்ற பல்வேறு களரி மற்றும் போர்த் திறன்கள் சிறந்த முறையில் கற்றுத் தரப்படுகின்றன.
இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள்
சென்னை தூர்தர்ஷன் (DD), திருவனந்தபுரம் தூர்தர்ஷன் (DD), விஜய் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.ற்போது, இந்த பயிற்சி மையத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிறப்பாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த பயிற்சி பள்ளியின் நிறுவனரும் முதன்மை பயிற்சியாளருமான கலைமணி Dr.M.கிறிஸ்துதாஸ் ஆசான் அவர்கள், பள்ளி நாடகங்கள், தையல் கலை, மேடை நாடகங்கள், சிலம்பம், களரி, சித்த வைத்தியம், சின்னத்திரை போன்ற துறைகளிலும் தேர்ச்சி பெற்று, கலைமாமணி, இளைஞர் விருது, எம்.ஜி.ஆர். விருது, தமிழன் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற சிறப்புக்குரியவர். ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் முத்தமிழ் பாபுல் உசேன் அவர்கள், இந்த பயிற்சி மையத்தையும், விழா நிகழ்வுகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்து திறம்பட நடத்தி வருகிறார். அவ்வாறு சிறப்பாக நடத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்த பயிற்சி நிறுவனத்தை பாராட்டி, ஆளுநர் அவர்கள் 2024ஆம் ஆண்டின் "சிறந்த குமரி களரி கலைக் களஞ்சியம்" என்ற சான்றிதழை வழங்கியுள்ளார். இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் அரசு ஆசான்களாகவும் சிறந்த பயிற்சியாளர்களாகவும் உள்ளனர். இந்நிறுவனத்தை "K.K.K.K." என்று சுருக்கமாக அழைக்கின்றனர்.